Skip to content

மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

  • by Authour

திருச்சி அடுத்த மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ்  என்பவர் புதிதாக வீடு கட்ட  உள்ளார்.  அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார்.  அதன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் தஅருளானந்தம், என்பவரை , வயரிங் தொழில் செய்யும் செங்குறிச்சி பிரவின் குமார் அணுகியபோது கடந்த 08.07.2025ந்தேதி, அருளாணந்தம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக  கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத  பிரவின்குமார், இது குறித்து  திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின்

பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 10.07.2025  லஞ்ச ஒழிப்பு  துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,  ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ். சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது வணிக ஆய்வாளர் அருளானந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.  அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

error: Content is protected !!