Skip to content

பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூராசாமி.விவசாயி. இவரது மனைவி இந்திரா காந்தி.இவரது மாமனார் அவரது இடத்தை இந்திரா காந்தியின் பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.அந்த உயில் மூலம் இடத்தை பத்திரப் பதிவு செய்துள்ளனர்.பின்னர் அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு பெருவளப்பூர் கிராம நிர்வாக அதிகாரி மோகன பூபதி (வயது 41) என்பவரை இந்திரா காந்தி அணுகினார்.அதற்கு அவர் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இந்திரா காந்தி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.பின்னர் இவர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கிராம நிர்வாக அதிகாரி மோகனபூபதிடம் கொடுத்தார்.அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கிராம நிர்வாக அதிகாரி மோகனபூபதியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது .கிராம நிர்வாக அதிகாரியின் சொந்த ஊர் பெரம்பலூர் ஆகும். பெரம்பலூர் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!