தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தேவகி, நம் பாளையத்தைச் சேர்ந்த பவானி, சின்ன கோபாலபுரம்-பெரிய கோபாலபுரத்தைச் சேர்ந்த ஷாலினி மற்றும் திருவல்லிகாலனியைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 4 பெண்களும் சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேற்படி நால்வரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

