கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை
திருச்சி அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் அருண்குமார் (வயது 31). இவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார்.அந்த பணத்தை அவரால் திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அருண்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது வீட்டின் அறையில் நள்ளிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாயார் தனலட்சுமி நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மணப்பாறை அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்து ரவுடி பலி
திருச்சி மணப்பாறை கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் தினேஷ் ( 24). பிரபல ரவுடியான இவர் மீது மணப்பாறை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் தினேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறையில் இருந்து பொத்த மேட்டுப்பட்டி நோக்கிசென்றார். பொத்த மேட்டுப்பட்டி பாலத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பாலத்தின் சுவற்றில் மோதி சரிந்தது இதில் கீழே விழுந்த தினேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் தினேஷ் சிகிச்சை
பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் அண்ணாவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் வாலிபரின் செல்போன் பறித்த 2 பேர் கைது
திருச்சி லால்குடி திண்ணியம் மணக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை மேம்பால பகுதியில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது சட்டை பையில் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபர்கள் ரெண்டு பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் ரெண்டு பேரையும் கைது செய்தனர் கைதானவர்கள் திருச்சி மணச்சநல்லூர் துடையூர் அரிஜனத் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் 22 முருங்கைப்பேட்டை முத்தரசநல்லூர் வசந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது மைதீன் 19 என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து ரூபாய் 8000 மதிப்பிலான செல்போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மத்திய ஜெயில் போக்கோ கைதி தப்பி ஓட்டம்
திருச்சி மத்திய ஜெயிலில் 1500க்கு மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தண்டரை கைதிகளில் சில கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்து ஜெயில் வளாகத்தில் விவசாயப் பணி மற்றும் கோழிப்பண்ணை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யாளுர் வடமதுரை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 25 என்பவர் போக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்று இங்கு அடைக்கப்பட்டிருந்தார் அவரை ஜெயில் அதிகாரிகள் கோழிப்பண்ணை வேலைக்கு ஈடுபடுத்தி வந்தனர் வழக்கம்போல் சக கைதிகளுடன் அவரை கோழிப்பண்ணை பணியில் ஈடுபடுத்தினர். அப்போது ராஜ்குமார் நைசாக அங்கிருந்து காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது பின்னர் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதை தொடர்ந்து மத்திய ஜெயில் அதிகாரி வெங்கடசுப்பிரமணி கே கே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் கத்தியுடன் வாலிபர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ரேஷன் கடை அருகாமையில் 2 மர்ம வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக இருந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் இரண்டு பேரையும் சுற்றி வளைத்தார் அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றார் மற்றொருவர் போலீஸ் பிடியில் சிக்கினார்
பின்னர் அவரை சோதனையிட்ட போது கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது பின்னர் அந்த நபரை கைது செய்தனர் கைதானவர் திருச்சி பெரிய மிளகு பாறை நாயக்கர் தெருவை சேர்ந்த ராம்குமார் 22 என்பது தெரியவந்தது தப்பி சென்றவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் வாலிபரின் செல்போன் பறித்த 2 பேர் கைது
திருச்சி லால்குடி திண்ணியம் மணக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை மேம்பால பகுதியில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது சட்டை பையில் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபர்கள் ரெண்டு பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் ரெண்டு பேரையும் கைது செய்தனர் கைதானவர்கள் திருச்சி மணச்சநல்லூர் துடையூர் அரிஜனத் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் 22 முருங்கைப்பேட்டை முத்தரசநல்லூர் வசந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது மைதீன் 19 என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து ரூபாய் 8000 மதிப்பிலான செல்போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு .ரவுடிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
திருச்சி சாத்தனூர் இட்சிகா மலைப்பட்டி எம்ஜிஆர் நகர் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் வயது 60 இவரது மகன் முகமது இப்ராஹிம் இவரும் திருச்சி ஆழ்வார்தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது உவைஸ் 32 தவ் பீக் ஆகிய மூன்று பேரும் தங்க கட்டி பிசினஸ் செய்து வந்தனர் பின்னர் முகமது இப்ராஹிமுக்கும் பங்குதாரர் முகமது உபைசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் முகமது இப்ராஹீமின் தந்தை முகமது ரபீக் திருச்சி பெரிய கடை வீதி கன்னிகா பரமேஸ்வரி கோவில் அருகே உள்ள ஒரு நகைக்கடைக்கு ஏழு தங்கக் கட்டிகளை விற்பனை செய்து விட்டு அதற்கான பணம் ரூபாய் 33 லட்சத்துடன் வெளியே வந்துள்ளார் அப்போது அங்கு மறைந்திருந்த முகமது உவைஸ் இன்னொரு ரவுடி முகமது அஷ்ரப் மற்றும் தவ் பிக்,
முசாமில் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து அந்த 33 லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது இதுகுறித்து முகமது ரஃபீக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னவல்லி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலி
திருச்சி அக்டோபர் இரண்டு திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது 75 பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் 52 நண்பர்களான இவர்கள் கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ராஜமேணிக்கம் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார் இதேபோன்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்கும் என்று அடையாளம் தெரியாத தொழிலாளிஅந்த வழியாக சென்ற வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை அதேபோன்று விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்தும் தகவல் கிடைக்கவில்லை இது பற்றி மேலபஞ்ச போர் கிராம நிர்வாக அலுவலர் மில்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை
திருச்சி உறையூர் டாக்கர் ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோவில் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் வயது 23 இவர் ஒரு நிதி நிறுவனத்தில் வாடகை அடிப்படையில் ஒரு ஆட்டோவை ஓட்டி வந்தார் கடந்த ஐந்து மாதங்களாக ரூ. 15000 வாடகை பாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் உறையூர் கல்லறை மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 32 ஹரி சுதன் மற்றும் தேவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அன்பழகனை திட்டிவிட்டு அங்கு வீட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோவை பறை முதல் செய்து எடுத்துச் சென்றனர் இதனால் மனம் உடைந்த அன்பழகன் அருகாமையில் உள்ள புனிதா என்ற பெண்ணுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிறுவனை கைது செய்தனர். கைதான விக்னேஷ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறுவன் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ஹரி ஹரசுதனை தேடி வருகின்றனர்.