Skip to content

ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட பணமோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.11,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளையும் முடக்கியுள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!