Skip to content

அரியலூர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்

அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

இங்கு உங்களை பார்க்கும்போது எனது கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றே நானும் பொறியியல் மாணவர் தான். நான் பொறியிய

ல் பயின்ற காலத்தில், தமிழ்நாட்டில் 20 இன்ஜினியரிங் கல்லூரி தான் இருந்தது. இன்று உங்களுக்கு நுழைவுத் தேர்வு எல்லாம் கிடையாது. என் காலத்தில் உண்டு.

கல்லூரியில் கலைவிழா நடைபெறும்போது உங்களைப் போன்றே, நானும் கடைசி வரிசையில் உட்கார்ந்து கல்லூரி கலைவிழாவில் குரலெழுப்பிய ஒருவன். அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ் பிரிவில், மாணவர் தலைவராக இருந்தவன். அந்த நினைவுகள் எல்லாம் இப்பொழுது மனதிலே, என் நெஞ்சிலே அலைபாய்கிறது.

அதேபோல இங்கிருந்து நம்முடைய மாணவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவன

த்திற்கு போய் வந்ததாக இங்கே கூறினார்கள். நான் பயின்ற காலத்தில், பத்து நாள் அங்கே சென்று பயிற்சி பெற்றதன் பலன், எனக்கு எப்போது கிடைத்தது என உங்களுக்கு தெரியுமா?

நான் மின்துறைக்கு அமைச்சராக்கப்பட்டு, வடசென்னையில் இருக்கின்ற பவர் பிளான்ட்க்கு சென்றபோது, கல்லூரி காலத்தில் பார்த்து நினைவுகளை வைத்து, அங்கே நான் கேள்விகள்

எழுப்பினேன். அங்கிருந்தவர்கள் பொறியியல் அறிவை வைத்து, இன்ஜினியரிங் பயின்றவன் என்பதை தெரிந்து கொண்டனர்.

அதுவரைக்கும் ஏதோ ஒரு அரசியல்வாதி, ஏதோ சாதாரண ஒரு எம்.எல்.ஏ, அமைச்சர் என்னும் வகையில் என்னை எண்ணினர். இன்ஜினியரிங் பேக்ரவுண்ட், அதுவும் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் படிப்பு. கல்வி என்பது எப்பொழுதும் கை கொடுக்கக் கூடியது என்பதற்கு, ஒரு சின்ன உதாரணமாக தான் இதை சொல்ல விரும்பினேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்திற்கு என்னை அமைச்சராக நியமித்தார்கள். அதுவும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக. நான் பொறுப்பேற்ற பின்னரே பள்ளி, கல்லூரியில் இருக்கின்ற கல்லூரி விடுதிகளிளெல்லாம் ஒரு நூலகம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

மாணவர்கள் பாடப் புத்தகத்தை படிப்பதைத் தாண்டி, உலகத்தை தெரிந்து கொள்வதற்கு நூலகம் அவசியம் என்ற காரணத்தினால் தான் அதைச் செய்தேன். அடுத்ததாக போக்குவரத்துத் துறை அமைச்சராக, முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். அவரின் வழிகாட்டுதலுடன் இன்றைக்கு பல்வேறு சாதனைகள் செய்தேன். மோசமாக இருந்த ஒரு துறை இன்றைக்கு தலைநிமிர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.

பழைய பேருந்து ஓடுகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையை மாற்றி, இன்றைக்கு நீங்கள் போகுமிடமெல்லாம் மஞ்சள் நிறத்தில் புறநகர் பேருந்துகளும், நீல நிறத்தில் நகரப் பேருந்துகளுமாக இயங்குகின்ற காட்சியை சாலையில் காணலாம். அந்த வாய்ப்பு எல்லாம் ஏற்படுத்திக் கொடுக்கின்ற பொழுது, அதிலே சீர்திருத்த நடவடிக்கை எடுப்பதற்கு நான் படித்த பொறியியல் கல்லூரி என்பது எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.

எனவே நீங்கள் பெறுகின்ற உங்கள் கல்வி, எதிர் காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். அதை நீங்கள் எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. நாங்கள் படிக்கும் போது கம்ப்யூட்டர் பார்த்ததில்லை. எங்களுடைய லேபில் மட்டும்தான் கம்ப்யூட்டர் இருக்கும். நாங்க தொட்டது கூட கிடையாது. ஆனால் இன்றைக்கு உங்கள் கைகளிலே நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் லேப்டாப் கொடுத்து கணினி அறிவை கற்க செய்கிறார்கள்.

நாங்க படிக்கும் போது பிளேஸ்மெண்ட் செல் என ஒன்று இருக்கும். அந்த பிளேஸ்மெண்ட் செல்லில் வந்து கேம்பஸ் இன்டர்வியூ பண்ணுவாங்க. அதுல எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. ஆனால் இன்று உங்களை கூர்மைப்படுத்துவதற்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஸ்கில் டெவலப்மென்ட் ப்ரோக்ராம் வந்துள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்ப இப்படியே சீரியஸா இருக்கணுமா? எனில், சீரியசா இல்லை. கல்லூரி வாழ்க்கை தான் நமக்கு வாழ்க்கையில் கிடைத்திருக்கின்ற ஒரு லைட்டர் சைடு. இதைத் தாண்டி நீங்க வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போது எல்லா விதமான சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். வேலை தேடனும், சம்பளம் கிடைக்கணும், அதெல்லாம் கிடைத்த பிறகு குடும்பத்தில் கல்யாணம் பண்ணுவாங்க. அவர்களுக்கும் சேர்த்து, நாம் ஒரு நல்ல வாழ்க்கையை தர வேண்டும். இப்படின்னு அடுத்த அடுத்த கட்டத்துக்கு போவோம். அதுவரைக்கும் நம்முடைய கவலைகள் இல்லாமல் நம்முடைய கவலைகளை பெற்றோர் மீது சுமத்தி விட்டு, நாம் ஒரு எளிமையாக இனிமையாக இருக்க கூடிய காலம் கல்லூரி பருவம் தான்.

அதை ஒருபுறம் இனிமையாகவும் இருக்க வேண்டும், இன்னொரு புறம் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அதற்கான கல்வியை நாம் அடிப்படையாக பெற வேண்டும். அதுதான் இந்த நேரத்தில் நான் வைக்கின்ற வேண்டுகோள்.

உங்களுக்கு இன்றைக்கு வாழ்க்கையின் எதிர்காலத்துக்கான கதவுகளை மிக எளிதாக திறந்து விடுகின்ற வாய்ப்பை தந்திருக்கிறது. அதை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒரேயொரு வேலைவாய்ப்புக்கு 100 பேர் விண்ணப்பிக்கின்ற சூழல் வந்துவிட்டது. அந்த 100 பேரில் ஒவ்வொருவருக்கும், என்ன விதமான திறமை உள்ளதோ, அதனுடன் போட்டி போட வேண்டும். அதற்கு நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும்.

கிராமப்புறங்களைச் சேர்ந்த நமக்கும், நகர்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இருக்கின்ற வித்தியாசமே, அவர்கள் எதையும் எளிதாக சந்திக்க தயாராக இருப்பார்கள். நாம் என்னதான் உயர் கல்வி பயின்று வந்தாலும் கூச்ச உணர்வோடு தான் இருக்கின்றோம். கூச்ச உணர்வை உடைத்து நேர்காணலை எதிர்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே, எதிர்காலத்திற்கான நல்ல வாய்ப்பை பெற முடியும். அதற்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

மாணவர்கள் உலக அறிவு மற்றும் பொது அறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் தந்திருக்கின்ற மடிக்கணினி எல்லா விதங்களிலும் பயனுள்ளதாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்று கீழே அமர்ந்திருக்கும் நீங்கள் நாளை எங்களை போல மேடைக்கு வந்து பரிசு கொடுப்பவர்களாக மாற வேண்டும் என உரையாற்றினார்.

பின்னர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலை திறன் விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். மேலும் தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினிகளையும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!