உக்ரைன் ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat) மூலம் தாக்குதல் நடத்தியது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த தாக்குதலில் உக்ரைனின் கப்பல் மூழ்கியது. இது ரஷ்ய கடற்படையின் ஆளில்லா படகு மூலம் முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதலாக கருதப்படுகிறது. உக்ரைன் தரப்பில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய நிலையில், குறைந்தபட்சம் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 2019-ல் துவக்கப்பட்டு, முதலில் மீன்பிடி கப்பலாக இருந்து பின்னர் ராணுவ உளவு பணிகளுக்காக மாற்றப்பட்டது. இதில் ரேடியோ உளவு அமைப்பு மற்றும் 30 மி.மீ. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், இந்த தாக்குதல் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் “ஜூலை புயல்” பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா படகு மூலம் நடத்தப்பட்டதாகவும், இது சுமார் 25 கி.மீ. தூரம் டான்யூப் ஆற்றில் பயணித்து இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.