தஞ்சை கடல் பகுதியில் 2வது நாளாக சாகர் கவாச் ஆபரேஷன் நடைபெற்றது கடல் மார்க்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படி தடுப்பது இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நேற்று துவங்கியது. இன்று தஞ்சை கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழுமம் டிஎஸ்பி முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் கடலோர காவலர்கள் ஒன்று சேர்ந்து அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் மற்றும் கட்டுமாவடி வரை கடலில்


படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் மீனவர் இடத்தில் சோதனை செய்து அடையாள அட்டை உள்ளதா மற்றும் படகு சம்பந்த ஆவணங்கள் உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மனோரா சுற்றுலா பகுதியில் தீவிர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டனர் . மேலும் கடற்கரை சாலைகள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்

