Skip to content

அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹500 முதல் ₹1,500 வரை ஊதிய உயர்வு அனுமதித்து அரசாணை வெளியீடு!

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப் பள்ளிகளில் ரூ.1,000 ஆக இருந்த ஊதியம் ரூ.1,500 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளில் ரூ.1,500 இருந்தது ரூ.2,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் 30,000 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ரேஷன் கடை ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோருக்கும் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!