கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது
திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு தெய்வம் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து தெய்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியவர் மாயம்
திருச்சி கேகே நகர் சுந்தர் நகர் சிம்கோ காலனியை சேர்ந்தவர் சையது அகமது.இவர் அந்தப் பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முதியோர் இல்லத்தில் திருச்சி பட்டவர்த்ரோட்டை சேர்ந்த வேல்முருகன் (70) என்பவர் சேர்ந்து தங்கி இருந்தார்.இந்த நிலையில் வேல்முருகன் கடந்த 14 ந்தேதி முதியோர் இல்லத்திலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது தொடர்பாக சையத் அஹமத் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியோர் இல்லத்தில் இருந்து காணாமல் போன வேல்முருகனை தேடி வருகின்றனர்.