கரூர் நகர காவல் நிலையத்தில் 3வது நாட்களாக கையெழுத்திட்ட சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வெங்கடேசன்.
கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார் அப்பொழுது கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் தமிழக வெற்றிக்கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில் கரூர் நகர காவல் நிலையத்தில் சேலம் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர் அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நீதிமன்றத்தில் அவருக்கு 7 நாட்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் காலை கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை உடன் ஜாமினை நீதிமன்றம் வழங்கியது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக வெற்றி கழக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மூன்றாவது நாளாக கையெழுத்திட வந்தார்.
அதைத் தொடர்ந்து இன்னும் நான்கு நாட்கள் கையெழுத்திட வருவதாக தகவல் தெரிவித்தார்.

