துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், நாளை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி வாக்குப்பதிவின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பற்றி விளக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சம்விதான் சதான் மத்திய அரங்கில் நாளை பகல் 2.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
நாளை துணை ஜனாதிபதி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு
- by Authour
