Skip to content

தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

  • by Authour

வால்பாறையில் தினசரி கூலியை உயர்த்தி தரவேண்டும் என தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா. வால்பாறை – ஆக – 4 கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் நகரப்புற பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளன இவர்கள் தனியார் எஸ்டேட் பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர் வால்பாறை பகுதியில் 21 வார்டுகள் உள்ளது இதில் குறிப்பாக இரண்டு வார்டுகள் மட்டுமே நகரப் பகுதியில் உள்ளதால் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் உள்ளனர் பணியாற்றி வருகின்றனர் தற்போது தரும் தினசரி ஊதியம் ரூ 425 ஆகும் கூடுதலாக தர வேண்டும் என பலமுறை நகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இருக்காதால் தற்காலிக தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர், தூய்மை பணியாளர்கள் கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களாக சம்பள உயர்வு கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை நகராட்சி மூலமாக தரும் உபகரணங்கள் தற்போது வரை தராததால் தங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது இதனால் நகராட்சி கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர் .

error: Content is protected !!