Skip to content

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.

தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்: தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு,  தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை,  தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி,  தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள், பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி,  தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

error: Content is protected !!