தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர். இந்த நகராட்சியில் மொத்தம் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 6 பேர் உள்ளனர்.
தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உமாமகேஸ்வரி 15 ஓட்டுகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலட்சுமி 15 ஓட்டுகளும் பெற்றனர். குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி தலைவரானார்.
இன்று அவர் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. இதில் உமாமகேஸ்வரி தோல்வி அடைந்தார். இதனால் அவர் தலைவர் பதவியை இழந்தார். திமுக கவுன்சிலர்களும் சேர்ந்து உமாமகேஸ்வரியை தோற்றகடித்தனர்.
ஏற்கனவே இவர் மீது திமுக உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்திருந்தனர். அதன் மீது இன்று வாக்கெடுப்பு நடந்ததில் உமாமகேஸ்வரி தோல்வி அடைந்து பதவி இழந்தார்.