Skip to content

கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

  • by Authour

கரூரில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தள்ளுபடி விலையில் சேலை மற்றும் சட்டை, வேஷ்டி வாங்கி விற்பனை துவக்கி வைத்தார்.

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவு வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக்காலங்களில் 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு இன்று முதல் முதல் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தனது குடும்பத்திற்கு சேலை மற்றும் சட்டை, வேஷ்டி உள்ளிட்டவைகளை 3,700 ரூபாய்க்கு வங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

மேலும் புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம் பட்டுப்புடவைகள் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன மேலும் கோவை மதுரை பரமக்குடி திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவிலும் ஆர்கானிக் மற்றும் களம் காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூபாய் 60 லட்சம் விற்பனைகளுக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த தீபாவளி சிறப்பு தருபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டி இல்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

error: Content is protected !!