Skip to content

சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

  • by Authour

சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்ட
ஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்பு
இ.யூமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்ட ஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு துக்கமும் துயரமும் அடைந்தேன்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்தாவது புனித கடமையான புனித ஹஜ் பயணம் இருக்கிறது. மற்ற நாட்களில் முஸ்லிம்கள் மெக்கா, மதினாவுக்குச் சென்று கஃபாவை வலம் வந்து, மற்றுமுள்ள புனித இடங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவதை ‘உம்ரா’ பயணம் என்று அழைக்கின்றனர். புனித உம்ரா பயணம் மேற்கொண்ட ஐதராபாத் சேர்ந்த பயணிகள் 45 பேர் திருமக்காவில் இருந்து நபிகள் நாயகம் அடங்கி யிருக்கும் மதினாவை நோக்கிப் பயணித்த தருணத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது டாங்கர் லாரி மோதியதால் உம்ரா யாத்ரீகர்கள் 45 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலியாகிய துயரச் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த துயரச் செய்தி அறிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் பொது வாழ்வில் உள்ள அனைத்து இயக்கத்தவர்களும் தங்களின் ஆழ்ந்த துயரங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

புனித உம்ரா பயணிகளின் மரணச் செய்தி உலக முஸ்லிம்களின் இதயங்களை மட்டுமின்றி உலக மக்களின் இதயங்களையும் உலுக்கிய இருக்கிறது. மறைந்தவர்கள் இறையருளுக்கு உரியவராகவும் அவர்களை இழந்திருக்கும் அவர்தம் குடும்பத்திருக்கு இறைவன் ஆறுதலையும் பொறுமையையும் தந்து அருள் புரியவும் எல்லோ ரும் வேண்டுவோம். உலகம் அமைதி யில் செல்லவும், எல்லாக் காலங்களிலும் இறையருள் எங்கும் சூழ்ந்திருக்கவும் வேண்டுவோம்.

ஐதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தாருக்கு அவர்களது பிரிவை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அல்லாஹ் கொடுப்பானாக என்று பிரார்த்திப்போம். அவர்களது பிழைகளை பொறுத்துக் கொண்டு ஜன்னத்துல் பிர்ஃதௌஸ் என்னும் பேராணந்த பெரும் வீட்டை இறைவன் அவர்களுக்கு வழங்குவானாக அவர்களின் மறைவால் வாடும் அவர்களது மக்கள் உற்றார் உறவினர்கள் அனை வருக்கும் சபுரன் ஜமீலன் என்னும் அழகிய பொறுமையை வழங்கு வதற்கு இறைஞ்சுவோம்.
எனது சார்பிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!