Skip to content

பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் திட்டம்…. சமயபுரம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தகவல்

  • by Authour

அம்மனுக்கு உகந்த உணவான கூல் பக்தர்களுக்கும் வழங்கியும் , பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் திட்டம் – சமயபுரம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன் அறிவிப்பு

அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து

தங்களது நேர்த்தி கடனை செலுத்தி செல்கின்றனர் . ஆடி மாதம் என்பதால் அம்மன் திருத்தலங்களில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம் .

அந்த வகையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு உகந்த கூல் படைத்தும் வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கும் திட்டமானது துவங்க உள்ளது, மேலும் வரும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், பிளவுஸ் துணி ,உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது என கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் பிச்சைமணி லட்சுமணன் தெரிவித்தார்.

error: Content is protected !!