சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டிவிட்டார். இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். தரையை துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாப்பை வைத்து சிறுமியை தலைமை ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இந்திரா காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

