கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள், விமானத்தின் பாகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் அண்டார்டிகா ஆப்பிரிக்கா போன்ற கண்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய மாதிரி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு நாட்கள் பள்ளி மாணவர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கும் அனுமதி
வழங்கப்படும் நிலையில் முதல் நாளான இன்று பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் வருகை புரிந்து இக்கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
மேலும் விமானம் எவ்வாறு இயங்குகிறது? விமான பாகங்களின் பயன்கள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். மேலும் பல்வேறு மாணவ மாணவிகள் விமானங்கள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.