Skip to content

எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞானிக்கு… சிறந்த வேளாண் சேவைக்கான விருது

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமாருக்கு கேபி சர்வதேச நிறுவனத்தின் சிறந்த வேளாண் சேவைக்கான விருது வழங்கும் விழா புதுக்கோட்டை அருகே திருமலைராய சமுத்திரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னோடி இயற்கை விவசாயி ஜி. எஸ்.தனபதி தலைமை வகித்தார் .சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தை மையமாகக் கொண்டு புதுடெல்லியில் செயல்படும் கேபி தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் வினோத் பண்டிட், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமாருக்கு சிறந்த வேளாண் சேவைக்கான 2025ஆம் ஆண்டின் கேபி தேசிய விருதை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் 2012 ஆம் ஆண்டு முதல் கேபி நிறுவனம் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் பயிர் மருத்துவ முகாம் ,டிஜிட்டல் வேளாண்மை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக கடந்த 13 வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். இவரின் முயற்சியால் இத்திட்டம் 7 மாநிலங்களில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 60,000 விவசாயிகள் பயனடைந்து உள்ளார்கள்.

அவருக்கு விருது வழங்கும் விழாவில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் பங்கேற்று இருப்பது அவருக்கும் விவசாயிகளுக்கும் உள்ள தொடர்பிற்கு சிறந்த உதாரணம் என்றார் கே பி நிறுவனம் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார். தற்போது உள்ள சூழ்நிலையில் இயற்கை விவசாயம் மற்றும் கால நிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியம். இப்பயிற்சிகளை எம் .எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கேபி செயல்படுத்தும் என்றார்.கேபி நிறுவன பயிர்நல ஆலோசகர் மஞ்சு தாக்கூர், கேபி மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களை பற்றியும் அதில் ராஜ்குமார் அவர்களின் பங்குகளிப்பை பற்றியும் விளக்கி பேசினார். நிகழ்வில் புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, குழந்தைகள் நலக்குழு தலைவர் கே. சதாசிவம், மரம் ராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம். வீரமுத்து , முன்னோடி விவசாயிகள் எம்.முத்துலட்சுமி, ர.வே. காமராசு, அறிவொளி சுடர் அறக்கட்டளை மாநில செயலாளர் தங்கவேல் ஆகியோர் வாழ்துரை வழங்கினர். திருமலை ராயசமுத்திர விவசாயிகள் மற்றும் அறிவொளி வளர்கல்வி நண்பர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர் .எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். வளர் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் குழு தலைவர்
கே. சிவகுமார் நன்றி கூறினார்.

error: Content is protected !!