பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு ஜாம்போரி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வாளகத்தில் இன்று மாலை தொடங்கி பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த சாரண மாநாட்டின் கருப்பொருள்” அதிகாரம் பெற்ற இளைஞர்கள் வளர்ந்த இந்தியா” என தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சாரணர்களுக்காக சிப்காட் வளாகத்தில் சாரணர்கள் தங்குவதற்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தயாரிப்பு கூடங்கள், மருத்துவ உதவி மையங்கள், கருத்தரங்கு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்ற காலையிலேயே பல்லாயிரகணக்கான சாரணர்கள் அங்கு குவிந்து விட்டதால் சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த சாரணர் மாநாட்டை தொடங்கி வைக்க துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் மணப்பாறை புறப்பட்டு சென்றார். 3 மணி அளவில் சாரணர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பங்கேற்கிறார்கள். பிப்ரவரி 2ம் தேதி நிறைவு விழா நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.