Skip to content

இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்

‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று நபர் ஊதியக் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என அமைச்சர் அளித்த உறுதியின் பேரில், முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்துப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் கல்வி நலன் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நல்லெண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்பை விடச் சிறப்பாகக் கற்பித்தல் பணியில் ஈடுபடப் போவதாகவும் ஆசிரியர்கள் உறுதியளித்துள்ளனர்.

error: Content is protected !!