ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் தவறுதலாக மிதித்ததில் கண்ணிவெடி வெடித்து அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக சக வீரர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேந்திர லஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி
- by Authour
