Skip to content

திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

நாம தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து  தரக்குறைவாக  விமர்சனம் செய்ததை கண்டித்து  டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.

4ம் எண் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னிலையில் இந்த வழக்கு  நடந்து வருகிறது. கடந்த மாதம் 7ம் தேதி சீமான் இந்த வழக்கில் ஆஜராகாததால்,  நீதிபதி   சீமானுக்கு எச்சரிக்கை செய்தார். நாளைக்கு ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றார்.

எனவே ஏப்ரல் 8ம் தேதி சீமான் ஆஜரானார். பின்னர் வழக்கு ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  அன்றையதினம் வருண்குமார் மட்டும் ஆஜரானார், சீமான் ஆஜராகவில்லை. எனவே  மே மாதம் 15ம் தேதிக்கு(இன்று) வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு  டிஐஜி வருண்குமார் மட்டும் ஆஜரானார். சீமான் வரவில்லை. அவருக்கு  உடல் நலம் சரியில்லை எனவே வரவில்லை என அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த முறையும்   கண்டனத்துக்
கு  பிறகு தான்  ஆஜா் ஆனார். இந்த வழக்கில்  எப்போது ஆஜராவார்  என்று கேட்டு சொல்லுங்கள் என கூறிய  நீதிபதி   வழக்கை ஒத்திவைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

error: Content is protected !!