Skip to content

திருத்தணியில் இருந்து சீமானின் தேர்தல் வேட்டை – முழு அட்டவணை!

நாம் தமிழர் கட்சியும் தனது தேர்தல் வேலைகளில் துவங்கி இருக்கிறது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் நடந்த நாம் தமிழர் மாநாடு பல்வேறு வரவேற்புகளை பெற்றது. அதற்கு முன்பு ஏற்கனவே சீமான் நடத்திய மரங்களின் மாநாடு, மாடுகளின் மாநாடு, கடல் அன்னை மாநாடு உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழல் சார்ந்த மாநாடுகள் மக்களிடையே கவனத்தைப் பெற்றன.

இதுவரை நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்ற மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இந்த சூழலில்தான் நாம் தமிழர் கட்சியும் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

ஏற்கனவே தேர்தல் செலவுக்காக மக்களிடமிருந்து திறள்நிதி கேட்டு நாதக நினைப்பாளராக காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் அவர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் தான் வருகிற 23 -ஆம் தேதி முதல் திருத்தணியில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்க உள்ளார்.

மார்ச் 23ஆம் தேதி திருத்தணியில் பரப்புரையை தொடங்கும் சீமான் மார்ச் 25ஆம் தேதி ஐந்து இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். கிருஷ்ணகிரி, சூளகிரி,பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், உள்ளிட்ட இடங்களில் அன்றைய தினம் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

அடுத்ததாக 26 -ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் பரப்புரை மேற்கொள்ள வருகிறார். மூன்றாவது நாளாக சங்கராபுரம் திருக்கோவிலூர் திருவண்ணாமலை சேத்துப்பட்டு வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

மார்ச் 28 -ஆம் தேதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சீமான் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க இருக்கிறார்கள். முதற்கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் பரப்புரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது.

error: Content is protected !!