கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த அஜித்குமார் 21 என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
திருச்சி சங்கரன்பிள்ளை சாலை பிரிஸ்டன் பாரதி தெருவை சேர்ந்தவர் வடிவேல் 55. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் மதுபான கூடத்தை சுத்தம் செய்ய சக ஊழியர்களுடன் காத்திருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார் இதுகுறித்து கோட்டை போலீஸ் வழக்கு பதிந்து சிந்தாமணி காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் 25 என்ற வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.