அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர கிளை மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா செய்து கடிதங்களை அனுப்பியுள்ளனர்.