டில்லியில் முப்படை உயர் அதிகாரிகள் இன்று செய்தியார்கள் சந்திப்பில் கூறியதாவது… உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம். பாக் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலும் விமானங்களை இயக்கினர். பாக்.ராணுவத்தின் தாக்குதலை விமானப்படை முறியடித்தது. எத்தகைய நவீன ஏவுகணைகளை ஏவினாலும் தாக்கி அழிக்கும் வல்லமை நம்மிடம்
உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. சீனாவின் மீஹா மற்றும் சொன்ர் ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானப்படை தளங்களும் பாதுகாப்பாக உள்ளன. வடக்கு அரேபிய கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் கேரியர் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளன. 140 கோடி இந்திய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி என இவ்வாறு தெரிவித்தனர்.