கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சிக்கு வருகை தந்து செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும், புத்தகங்கள் பரிசளித்தும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விழாக்களில் திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சிக்கு வந்த செந்தில் பாலாஜியிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.