பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு. வேட்டி-சேலை யுடன் ரூ.3,000 ரொக்கம் ஆகி யவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி,தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி, ரேசன் கடைகளில் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஒரு நாளில் 200 பேர் வீதம் வழங்க திட்டமிட்டு ஏற்கெனவே
டோக்கன்கள் வழங்கப்பட்டுள் ளன.பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட ரேசன் கடைக்கு சென்றனர்.
பொதுவாக ரேசன் கடையில் பொருட்கள் வாங்கும் பொழுது குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை இயந்திரத்தில் வைக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு பொருட்கள் வழங்குவது வழக்கம்.அதுபோல நேற்று பொதுமக்கள் ரேசன் கடைக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொரும் ரேசன் கார்டை ஊழியரிடம் வழங்கினார்கள்.இதையடுத்து ரேசன் கடை ஊழியர் இயந்திரத்தில் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் கைரேகையை வைக்க சொன்ன போது அது ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அடுத்தடுத்து கைரேகைகளை வைத்த பொழுது ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், சர்வர் பிரச்சினை காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்க தாமதம் ஆனது. ஒரே சமயத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் கைரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்ற காரணத்தால் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார்கள்.
நேரம் ஆக ஆக பரிசுத் தொகுப்பு பெற வந்த மக்கள், நீண்டவரிசையில்காத்திருக்கவேண் டியதாயிற்று. முதியவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். அனைத்துத் தரப்பு மக்களும் அதிருப்தி அடைந்தனர். ரேசன் கடைகளுக்குச் சென்ற மக்கள், பிற்பகல் 3 மணியளவில் தான் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடிந்தது. பிற்பகல் 3 மணி வரை 100 டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருந்தது. காலதாம்தம் காரணமாக ஆத்திரமடைந்த சிலர், ரேசன்கடை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவு ஏழு மணி வரை பரிசுத் தொகுப்புபணி தொடர்ந்துள்ளது. சில முதியவர்களுக்குமுற்றிலுமாக கைரேகை பதிவாகவில்லை அவர்கள் நீண்ட நேரமாக என்ன செய்வது என்று தெரியாமல் ரேசன் கடை வாசலிலே நீண்ட நேரம் அமர்ந்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் திரும்பி சென்றனர். இன்று இரண்டாவது நாளாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் இன்றைக்கும் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இது குறித்து ரேசன் கடை ஊழியர் கூறும் பொழுது பொதுமக்களுக்கு எந்தவித சிரமம் இன்றி எங்களுடைய பணியை பொறுப்பெடுத்தாமல் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி வருகிறோம். ஆனால் திடீரென்று சர்வர் பிரச்சனை ஏற்படும் பொழுது என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை.
இது ஆன்லைன் பிரச்சனை. அதனால் நாங்கள் இதனை சரி செய்ய முடியாது. இந்த விஷயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி சர்வர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.
எனவே இதேநிலை இனி தொடர்ந்தால் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். எனவே, இதைத் தவிர்க்கும் வகை யிலும், மக்களின் கோபத்துக்கு ரேசன் கடை பணியாளர்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையிலும் சர்வர் பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் வலியுறுத்திள்ளனர்.

