திருச்சி மாவட்டம், 37 வது வார்டிற்குட்பட்ட காமராஜ் நகர் பி.டி. காலணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சியினால் மேற்கொள்ளப்பட்டு அனைத்து தெருகளிலும் பைப்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த பைப்பு குழாய்களிருந்து தொடர்ந்து கழிவு நீர் வெளியேறு வருகிறது. கழிவு நீரானது தெருக்கள் முழுவதும் பரவ, நோய் தோற்று ஏற்படும் அவல நிலை உருவாகிறது. உடனே அந்த பகுதி மக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகளை அனுகி முறையிட்டதை அடுத்து, 37 வது வார்டு கிளை தலைவர் கேபிள் சித்திக் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்திடம் முதல் கட்டமாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவெறும்பூர் தொகுதி அமைப்பு செயலாளர் இஸ்மாயில் ராஜா, 37 வது வார்டு செயலாளர் கவுஸ் பாஷா, அஸரப் அலி, பஷீர் மற்றும் பி.டி. காலனி பகுதி மக்கள் உடன் இருந்தனர்.

