சிறுமிக்கு பாலியல் தொல்லை… கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் (29. ) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 28 – ந் தேதி இருவருக்கும் அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் திருச்சி தில்லைநகரில் உள்ள கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அஜித் குமார் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிந்தது.இதையடுத்து ஶ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அஜித் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழககுப்பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் அவரது குடும்பத்தினரான குருசாமி, சின்னபொண்ணு, ராம்குமார், சுதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டில் தூக்கிட்டு வெல்டர் தற்கொலை..
திருச்சி மன்னார்புரம் காஜா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 38 ), வெல்டர். இவரது மனைவி மேனகா (32. ) இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மேனகா கோவித்துக் கொண்டு சமயபுரம் கோயிலுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பிய போது, வீட்டில் சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி பீகார் மாநில தொழிலாளர் பலி
பீகார் மாநிலம் அபி சமஸ்திபூர் ஹசன்பூரை சேர்ந்தவர் பரத் ஷனி (40. ) இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள பிரபல சிமெண்ட் குடோனில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பரத் ஷனி அரியமங்கலம் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மரக்கடை அருகே சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட பரத் தலையில் பலத்த காயம் அடைந்தார் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாரியம்மன் கோயில் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு கடந்த தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார அங்கு சோதனை நடத்தி திருச்சி கே கள்ளிக்குடி பாஸ்கர் காலனி சேர்ந்த கிரன் குமார் 24 என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசல் பொது கழிப்பறை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை விசாரித்தனர் இதில் அவர்கள் மணப்பாறை கோவில்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (24 ) கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் 19 என்பதும் அவர்கள் அங்கு போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள 60 போதே மாத்திரைகள் மற்றும் 6 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.