கிங் படத்தின் ஆக்ஷன் காட்சியின்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘கிங்’ என்னும் படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தை சித்தார்த் இயக்குகிறார். இதில் ஷாரூக்கானின் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. பிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2026-ம் ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில் கிங் படத்தின் ஆக்ஷன் காட்சியின்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சண்டைக் காட்சியின்போது அவருக்கு, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. தசை பிரண்டுள்ளதாகவும், ஒரு மாதம் ஓய்வெடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.