உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நலன் குளத்தில் நீராடி வருகின்றனர்.உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சனி பகவானுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள தனி தலம் இது. மற்ற கோயில்களில் நவ கிரகங்களிலோ, தனி சிலையாகவோ சனி பகவான் அருள் பாலிப்பார்.ஆனால் திருநள்ளாறில் தான் சனீஸ்வரனுக்கு

என்று பிரசித்தி பெற்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. இதையொட்டி இந்த கோயிலில் அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
இதை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் மட்டுமல்லாது தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான நலன் குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
சனி பெயர்ச்சி நிகழ்ச்சிக்காக புதிய நீர் நிரப்பப்பட்டு சுகாதாரத்தை பேணிக்காக்க குளத்தில் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுது.
நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் அவசர ஓட்டிகள் தயாராக இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் 2.கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

