Skip to content

குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி

குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் படை போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சூரத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சோனி என்பவர் வைத்திருந்த சிறிய டப்பாவில் 6.5 மில்லி லிட்டர் கொடிய பாம்பு விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5.85 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட சோனியிடம் நடத்திய விசாரணையில், அவர் இதனை அதிக விலைக்கு விற்கத் திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மற்ற கூட்டாளிகளைப் பிடிக்க போலீசார் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். சோனி மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வைத்ததில், அந்த விஷத்தை ரூ.8 கோடிக்கு வாங்க ஒரு கும்பல் சம்மதித்தது. அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து 6 பேரைக் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் மத்திய பிரதேசத்தையும், மற்றவர்கள் சூரத்தையும் சேர்ந்தவர்கள்.

குஜராத்தில் இவ்வளவு அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுவே முதல் முறை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விஷமானது மருந்து தயாரிப்பு மற்றும் போதை பார்ட்டிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!