Skip to content

மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தனது சொந்தப் பாட்டியையே அடித்துக் கொன்ற பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள வீ. காட்டுப்பாளையத்தில் இரும்பு பெட்டியில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பேரனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.
தனது பாட்டியிடம் மது குடிக்கப் பணம் கேட்டு அந்த இளைஞர் தகராறு செய்துள்ளார். பாட்டி பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஆத்திரமடைந்த பேரன், அருகில் இருந்த கட்டை அல்லது கல்லை எடுத்து பாட்டியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் பயத்தில் பேரன் என்னசெய்வது என்று தெரியாமல் இரும்பு பெட்டிக்குள் வைத்து மூதாட்டியின் சடலத்தை வைத்துள்ளது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி பேரனைப் போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மதுபோதையில் தனது பாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!