இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார். இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஒரு கன்டெய்னரில் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே லாபம் கிடைக்கும். அதை விட வரி மிகவும் அதிகமாக இருப்பதால் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட கன்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த கன்டெய்னர்கள் அமெரிக்காவை சென்றடைய இன்னும் 15 நாட்கள் வரை ஆகும்.
அந்த கடல் உணவு வேறு நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றால், அந்த கன்டெய்னரை பிரித்து, அதில் வேறு நாட்டுக்கு உரிய முறையில் ‘பேக்கிங்’ செய்ய வேண்டும். இது அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.
50 சதவீதம் வரி விதித்துள்ளதால் ஏற்றுதி பாதிக்கப்ட்டு இறால் தேங்கமடைத்துள்ளது. ஆகையால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ள இறால்களை உள்ளூர் மக்கள் வாங்கும் அளவிற்கு விற்பனை செய்ய இறால் பன்ணையாளர்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.