Skip to content

நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும். இதனைக் கண்டித்தும் பழக்கம் தொடர்ந்ததால் இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஆணவக் கொலை என்ற கண்டனங்களும் எழுந்துள்ளன.இதற்கிடையில் உயிரிழந்த இளைஞர் கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலையாளி சுர்ஜித் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

கொலையாளியின் தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தச் சம்பவத்தில் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்களின் பெயர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சப்இன்ஸ்பெக்டர் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இருவரும்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

error: Content is protected !!