அரிவாள் வெட்டு..
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். பழனியப்பன் அவரது வீட்டில் ஒரு செடியை வளர்த்துள்ளார். அந்த அந்தச் செடியின் இலைகள் நாகராஜன் வீட்டில் விழுந்துள்ளன. இதனால் நாகராஜ் இந்த செடியை வெட்டி உள்ளார். இதை பழனியப்பன் தடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது நாகராஜ் பழனியப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் பழனியப்பனின் மகன்களான நரேஷ் குமார் (24) கமலேஷ் (21) ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார் இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் காயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
கணவர் கள்ளக்காதல்- மனைவி தற்கொலை
திருச்சி, திருவெறும்பூர் அருகே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதால் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவியின் சகோதரர்கள் கணவர் மற்றும் மாமியாரை கத்தியில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ இவரது மனைவி கனிமொழி (32) இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான் பிரிட்டோ குமரேசபுரம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் இதனால் ஜான் பிரிட்டோவிற்கும் கனிமொழிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று
இரவு 10.30 மணிக்கு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதனால் கனிமொழி அவருடைய அண்ணன் திலீப் என்பவருக்கு போன் மூலம் ஊருக்கு வந்து விடுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
திலீப் தனது உறவினர் ராஜேஷ் என்பவரையும் தனது தாய் மங்களம் மேரியையும்
அழைத்துக் கொண்டு ஊரிலிருந்து கீழ முல்லக்குடிக்கு நள்ளிரவு 12.10 மணிக்கு வந்தபோது பெட்ரூம் கதவு உள்தாளிட்டு இருந்ததால் ராஜேஷ் கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது கனிமொழி துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தவரை துப்பட்டாவை அறுத்து கீழே இறக்கியுள்ளார்கள்.அப்பொழுது வீட்டின் அருகில் கணவன் மற்றும் அவரது தாய் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கோபத்தில் இருந்த திலீப் வீட்டில் கிடந்த சிறிய கத்தியால் ஜான் பீட்டர் தலை மற்றும் இரண்டு கால்களில் வெட்டியதில் ஜான் பிரிட்டோவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும்
ஜான் பீட்டர் தாயையும் தாக்கியுள்ளார்கள்.
பின்னர் கனிமொழியை ராஜேஷ், திலீப், அவர் அம்மா ஆகியோர் வாடகை கார் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு கனிமொழியை பரிசோதனை செய்த மருத்துவர் கனிமொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
கனிமொழிக்கும் ஜான் பீட்டர் இருக்கும் இடையே திருமணமாகி ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் திருச்சி உதவி கலெக்டர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் காயம் அடைந்த ஜான் பீட்டர் பாத்திமாமேரியும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

