விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், லால்சந்த் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவிலான வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பொருட்களுக்கு 3 சதவீத வருமான வரி மற்றும் 3 சதவீத அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

