Skip to content

சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ஆனந்த்,  கூலித்தொழிலாளி .இவரும் புங்கனூர் கீழ தெருவை சேர்ந்த பேக்கரி மாஸ்டரான மோகன்ராஜ்  என்பவரும்  இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன் கோவில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.  ரயில்வே கேட் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது  பைக், எதிர்பாராத விதமாக வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி குப்பை கிடங்கு சுற்று சுவரில் மோதி   இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.  அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 வாகனம்  மூலம் சீர்காழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சீர்காழி மருத்துவமனையில் ஆனந்தை பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மேலும் மோகன் ராஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் இறந்த சம்பவம்  சீர்காழி பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!