Skip to content

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் மேலும் பலர் சிக்கி இருப்பதாக  கூறப்படுகிறது.  வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!