திருச்சி மாவட்டம், லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் ( 19). இவர் உப்பிலியாபுரம்போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று சிறை வளாகத்தில் அவர் இருந்த போது திடீரென்று ஹரி ஹரன்னை பாம்பு கடித்துவிட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மயங்கி கிடந்த ஹரிஹரனை .உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்
- by Authour
