ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பின்பற்றி, ஆந்திர மாநிலத்திலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து ஆந்திர மந்திரி நரா லோகேஷ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் இந்தச் சட்டம் குறித்து ஆந்திர அரசு ஆய்வு செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார்கள் தாங்கள் எதைப் பார்க்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாததால், அவர்களுக்குச் சமூக ஊடகத் தடையை அமல்படுத்த வலுவான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

