சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சந்திராயன் 3 நிலவில் இறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.மாணவ மாணவிகள் இயற்பியல் ,வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்கள் தொடர்பாக பல்வேறு அறிவியல் மாதிரிகளை தயாரித்து காட்சிப் படுத்தி பார்வைக்கு வைத்திருந்தனர். இதை பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களும் பார்வையிட்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் குமார் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் செந்தில், பிரபாகரன், ரேவதி மற்றும் பவானி சிறப்பாக செய்திருந்தனர்.
