Skip to content

ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை   விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அந்த 3 கட்சிகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அவர்கள்,  தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.   ,இதுகுறித்து 3 கட்சித்தலைவர்களும்  பத்திரிகையாளர்களிடம்  விளக்கினர். இன்று  தமிழக அமைச்சரவை  கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.  அந்த கூட்டத்துக்கு முன் இந்த சந்திப்பு நடந்துள்ளது. எனவே  இன்று  அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!