Skip to content

தஞ்சை பெரிய கோவில் ஆருத்ரா தரிசனம்-4 ராஜவீதியில் வீதியுலா நடராஜ பெருமான்

தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம் 4 ராஜ வீதிகளில் வீதியுலா
வந்த நடராஜ பெருமான்
மும்மாரி மழை பொழிய நெல்மணிகளை தூவி வழிபாடு நடத்திய பக்தர்கள்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி
நடராஜ பெருமானுக்கு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு

நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!