Skip to content

ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், மக்கள் தங்களது வேலைகளுக்காக மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கி திரும்பி வருகின்றனர். அதனால், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்ட அலைமோதுவதை காண முடிகிறது. இதனால், பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, நெல்லை மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து இரண்டு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு அதிவிரைவு ரயில் (06166) திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இன்று (புதன்கிழமை அக்.22) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு நாளை (வியாழக்கிழமை அக்.23) காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறு மார்க்கமாக, சென்னை எழும்பூர் – நெல்லை சிறப்பு அதிவிரைவு விரைவு ரயில் (06165) சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை அக்.23) பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை (அக்.24) அதிகாலை 12.15 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

மேற்கண்ட இரண்டு ரயில்களும் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களின் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!