ஆயுதபூஜை அக்டோபர் 1-ந் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகர்கோவில் – தாம்பரம் : நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் (வண்டி எண் 06012/06011). நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிறு) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
சென்னை சென்டிரல் – போத்தனூர்: சென்னை சென்டிரல் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் (06123/06124). சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரல் – செங்கோட்டை: சென்னை சென்டிரல் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் (06121/06122) . சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்) மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி: சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் (06070/06069) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10,17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் நள்ளிரவு 1.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
தூத்துக்குடி – சென்னை எழும்பூர்: தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் (06018/06017) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
நாகர்கோவில் – சென்னை சென்டிரல்: மேலும், நாகர்கோவில் – சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் (06054/06053) இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.